1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 மார்ச் 2021 (20:25 IST)

பெயர்ஸ்டோ சதம்: இலக்கை நெருங்கி வரும் இங்கிலாந்து

பெயர்ஸ்டோ சதம்: இலக்கை நெருங்கி வரும் இங்கிலாந்து
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே புனே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி இலக்கை நெருங்கி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. இந்த நிலையில் 337 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி 32 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் அடித்து உள்ளது. ஜானி பேர்ஸ்டோ மிக அபாரமாக விளையாடி 100 பந்துகளில் 108 ரன்கள் எடுத்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் 50 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இன்னும் களத்தில் இருப்பதால் இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முன்னதாக ஜேசன் ராய் 55 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி இன்னும் 18 ஓவர்களில் 119 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டி உள்ளது என்பதும் அந்த அணியின் கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது