திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (11:35 IST)

பாகிஸ்தானுக்கு 355 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து அணி!

இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி கடைசி நாளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. அதையடுத்து இப்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த் இங்கிலாந்து அணி 275 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 202 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் பின்னர் ஆடிய 281 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி தங்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு விளையாட உள்ளது.