1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. England oval stadium snow fall

என்னதான் ஆச்சு ஓவல் மைதானத்துக்கு… ? பனிப்போர்வை போர்த்தி இப்படி ஒரு கோலமா?

இங்கிலாந்து
லண்டனில் உள்ள ஓவல் மைதானம் பனிப்பொழிவு காரணமாக முழுவதும் பனியால் சூழப்பட்டு வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.

இங்கிலாந்தின் லண்டன் நகரம் முழுவதும் இப்போது கடுமையான பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதன் காரணமாக லண்டன் நகர் முழுவதும் பனிப்போர்வை சூழ்ந்துள்ளது. மேலும் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்தின் ஓவல் மைதானம் முழுவதும் பனியால் சூழப்பட்டு வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தற்போது இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 
அடுத்த கட்டுரையில்
அயர்லாந்து நாடு அறிவித்த ஆஃபர்.... வாய்ப்பு நிராகரித்த இந்திய வீரர்