ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 14 ஜூன் 2021 (16:45 IST)

தலையில் அடிபட்டு நினைவாற்றலை இழந்த டுபிளசிஸ்… இப்போது எப்படி இருக்கிறார்!

தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான பாஃப் டு பிளசீஸ் இப்போது பாகிஸ்தான் பிரிமீயர் லீக்கில் விளையாடி வருகிறார்.

கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட பாகிஸ்தான் ப்ரிமியர் லீக் இப்போது அபுதாபியில் நடந்து வருகிறது. இந்நிலையில் இதில் கலந்துகொண்டு பாப் டு பிளசிஸ் பீல்டிங்கின்போது சக வீரரான முகமது ஹஸ்னைனுடன் கடுமையாக மோதிக் கொண்டார். இதனால் அவருக்கு தலையில் கடுமையான அடிபட்டது. மைதானத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் ஸ்கேன் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்.

அதையடுத்து இப்போது தேறிவரும் அவர் டிவிட்டரில் ‘பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி. எனக்கு தலையில் கன்கஷன் ஏற்பட்டு சிறிது நேரம் நினைவாற்றலை இழந்தேன். இப்போது தேறி வருகிறேன்’ எனக் கூறியுள்ளார்.