1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Dream 11 does not want to continue as india title sponsor

இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11

Online Gambling Bill
ஒன்றிய அரசு சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட மசோதா, பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு ஒரு பெரும் அடியாக விழுந்துள்ளது. இந்த மசோதாவின் மூலம், பணம் கட்டி விளையாடும் அனைத்து விளையாட்டுகளும் சூதாட்டமாகவே கருதப்பட்டு, முற்றிலுமாகத் தடை செய்யப்படுகின்றன.

இந்த நடவடிக்கை காரணமாக, பிரபல ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான ட்ரீம்11, தனது தளத்தில் பணம் கட்டி விளையாடும் போட்டிகளை நிறுத்த தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக உள்ளது. இதன் காரணமாக பெருமளவில் வருவாயை ஈட்டி வருகிறது.

ஆனால் தற்போது இந்த மசோதா காரணமாக இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை என்று பிசிசிஐயிடம் dream 11 நிறுவனம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய ஸ்பான்சரைத் தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம்… பிசிசிஐ தரப்பு பதில்!