1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (16:15 IST)

என்சிஏ தலைவர் பதவிக்கு டிராவிட் மீண்டும் போட்டி!

இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரான முன்னாள் கேப்டன் டிராவிட்வின் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், அவர் மீண்டும் அப்பதவிக்கு விண்ணபிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், என்சிஏ என்ற தேசிய கிர்க்கெட் அகாடமியின் தலைவருமான டிராவிட்டின் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம்  முடிவடைந்தது.
இதைத்தொடந்து பிசிசிஐ கிரிக்கெட் வாரியம் என்சி.ஏ,தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரியுள்ளது.

இதில், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பாவான்களும், பயிற்சியாளர்களும் விண்ணப்பிக்கலாம் என கருதப்படும் நிலையில் மீண்டும் ராகுல் டிராவிட் விண்ணப்பிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்பதவிக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 15 ஆம் தேதி இறுதித் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.