ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 11 ஜனவரி 2023 (11:04 IST)

விரக்தி எங்கேயும் கொண்டு செல்லாது… சதத்துக்குப் பிறகு கோலி கருத்து!

இந்திய அணியின் விராட் கோலி நேற்று தன்னுடைய 45 ஆவது சதத்தை அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நேற்றைய ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் மூன்றாவது இறங்கிய இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி, அதிரடியாக விளையாடி சதமடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் அவரின் 45 ஆவது சதமாகும். இந்தியாவில் அவர் அடித்த 20 ஆவது சதமாகும். இதன் மூலம் இந்தியாவில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இதன் மூலம் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.அப்போது பேசிய கோலி “நான் சதங்கள் அடிக்காத போதும் (கடந்த 3 ஆண்டுகளாக) இதே போலதான் பயிற்சியில் ஈடுபட்டேன். நான் இப்போது ஒன்றை புரிந்துகொண்டுள்ளேன். விரக்தி உங்களை எங்கேயும் கூட்டிச் செல்லாது. குழப்பம் இல்லாமல் மைதானத்துக்கு சென்று இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். மைதானத்தின் நிலைக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.