வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (14:03 IST)

தோனியின் 20 ஆண்டுகால சாதனையை சமன் செய்த துருவ் ஜுரெல்!

நடப்பாண்டுக்கான துலிப் கோப்பை தொடர் தற்போது நடந்துவருகிறது. இதில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் மோதும் போட்டி நடந்தது. அந்த போட்டியில் இந்தியா பி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா பி அணி 321 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய பி அணி 184 ரன்கள் சேர்க்க ஏ அணிக்கு வெற்றி இலக்காக 274 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் ஏ அணி 198 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பி அணியின் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் 7 கேட்ச்களைப் பிடித்து அசத்தினார். இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் துலிப் கோப்பை போட்டியில் தோனி படைத்த சாதனையை அவர் சமன் செய்துள்ளார். 2004 -2005 சீசனில் தோனி ஒரே இன்னிங்ஸில் 7 கேட்ச்களை பிடித்திருந்ததே சாதனையாக இருந்தது.