வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 12 ஜூலை 2023 (07:58 IST)

தீபக் சஹாரை செம்மையாக கலாய்த்த தோனி...!

ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு நடித்துள்ள எல் ஜி எம் படததை தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார்.இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன் தினம் நடந்தது. விழாவில் தோனி தன் மனைவி சாக்‌ஷியோடு கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய தோனி தன்னுடைய சக சிஎஸ்கே வீரரான தீபக் சஹார் பற்றி ஜாலியாக பேசியது கவனத்தைப் பெற்றுள்ளது. அவரது பேச்சில் “தீபக் சஹார் போதையைப் போன்றவர். அவர் நம் அருகில் இல்லை என்றால் நாம் அவரை தேடுவோம். அருகில் இருந்தால் இவர் ஏன் இங்கு இருக்கிறார் என தோன்றும்.

அவர் இப்போது பக்குவமாகி வருகிறார். என்னுடைய 8 வயது மகளான ஸீவாவின் அளவுக்கு இப்போது பக்குவமாகியுள்ளார். அவர் முழுமையாக பக்குவமடைவதை என்னால் கடைசி வரை பார்க்க முடியாது என நினைக்கிறேன்” என ஜாலியாகக் கலாய்த்து பேசியுள்ளார். தீபக் சஹாரை செல்லமாக தோனி சீண்டும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.