1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2023 (19:33 IST)

#LGM :எல்லா வீட்டிலும் மனைவிதான் பாஸ்’ -முன்னாள் கேப்டன் தோனி

shakshi dhoni
‘எல்லா வீட்டிலும் மனைவிதான் பாஸ்’ என்று முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர்,  சென்னை கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ள நிலையில் சமீபத்தில்  தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த நிறுவனத்தின் முதல் படமாக எல்.ஜி.எம் (Lets Get Married)   என்ற தமிழ்ப் படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ஹீரோவாக நடிகர்  ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு ஆகியோர்  நடித்துள்ளனர். இப்படத்தை   ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.

‘லெட்ஸ் கெட் மேரிட்’ படத்தின் டிரைய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா  நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தோனி, அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த  நிகழ்ச்சியின்போது பேசிய தோனி, ''திருமணமான  அனைவருக்குமே வீட்டில் உண்மையான பாஸ் மனைவிதான்.  தயாரிப்பு நிறுவனம் தொடங்கலாம் என்று சாக்ஷி என்னிடம் கூறியபோது.  நான் மறுபேச்சு எதுவும் பேசவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள  இப்படத்தின் டிரைலரை  நேற்று படக்குழு வெளியிட்டனர். இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.