1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2023 (07:05 IST)

தோனி தயாரித்துள்ள ‘எல் ஜி எம்’ படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

தோனி தயாரித்துள்ள ‘எல் ஜி எம்’ படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் முதல் படமாக தமிழ்ப் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார். இந்த படத்துக்கு லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் இசை மற்றும் ஆடியோ வெளியீடு நேற்று வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிகழ்வுக்காக தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி ஆகியோர் சென்னை வந்திருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.