வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 1 ஜனவரி 2024 (07:28 IST)

ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு… புத்தாண்டில் அறிவிப்பை வெளியிட்ட ஆஸி வீரர்!

உலகக் கோப்பையை வெற்றிகரமாக வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி அடுத்து பாகிஸ்தானோடு டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. இந்த தொடரோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக டேவிட் வார்னர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதாகும் வார்னர் 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6931 ரன்களை 45 க்கும் மேல் சராசரியில் சேர்த்துள்ளார். அவர் 22 சர்வதேச சதங்களையும் சேர்த்துள்ளார்.

ஓய்வு பற்றி அறிவித்துள்ள வார்னர் “2025 ஆம் ஆண்டு நடக்க உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு நான் தேவைப்பட்டால் அணிக்கு திரும்புவேன்” எனக் கூறியுள்ளார்.