1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 18 மே 2023 (15:23 IST)

விளம்பர விதிமீறல்கள்… நம்பர் 1 இருக்குறது நம்ம தல தோனியா?

சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனி, இப்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். ஆனாலும் இன்னும் அவருக்கான மதிப்பு ரசிகர்கள் மத்தியில் குறைந்து விடவில்லை.

இதனால் பல விளம்பர நிறுவனங்கள் அவரை தங்கள் பிராண்ட்களுக்கு தூதுவராக ஆக்கி விளம்பரங்கள் எடுத்து வெளியிடுகின்றனர். அப்படி நடித்து கல்லா கட்டும் தோனி, அதிகளவில் விளம்பர விதிமீறல்களில் ஈடுபட்ட பிரபலங்களின் பட்டியலில் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கிறாராம்.

தோனி இதுபோல 10 விதிமீறல் விளம்பரங்களில் நடித்துள்ளதாக இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் தெரிவித்துள்ளது. தோனி மட்டுமில்லாமல் இதுபோல விளம்பரங்களில் நடிக்கும் பல இந்திய பிரபலங்களின் மீதும் புகார்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 803 சதவீதம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.