1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 மே 2023 (10:06 IST)

100 வருஷத்துக்கு ஒருமுறை நிகழும் அற்புதம் தோனி! – கவாஸ்கர் நெகிழ்ச்சி!

Gawaskar
நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் தோனியிடம் ஆட்டோகிராப் பெற்ற கவாஸ்கர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

ஐபிஎல் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த சிஎஸ்கே – கொல்கத்தா அணிகள் இடையேயான போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு அதன் ஹோம் க்ரவுண்டில் இதுவே கடைசி லீக் போட்டி என்பதால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் எல்லாருக்கும் முன் முதல் ஆளாக, முதல் ரசிகராக சிஎஸ்கே கேப்டன் தோனியிடம் ஓடி சென்று ஆட்டோகிராப் பெற்றார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். இது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால் தோனியின் கேப்டன்ஷிப்பை, திறமையான ஆட்டத்தை ஆரம்பம் முதலே மிகவும் ரசித்து வருபவர் கவாஸ்கர்.

இதுகுறித்து பேசிய கவாஸ்கர் “தோனி போன்ற ஒரு வீரர் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கிடைப்பார். அதனால்தான் அவர் தொடர்ந்து விளையாடுவதை பார்க்க வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். இது தோனியின் கடைசி சீசனாக இருக்கக் கூடாது என்றுதான் நானும் ஆசைப்படுகிறேன். அவர் மேலும் சில காலம் விளையாட வேண்டும்” என தனது ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Edit by Prasanth.K