1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 மே 2023 (10:00 IST)

முதல் பந்திலேயே என் தவறை உணர்ந்துவிட்டேன்.. தோல்விக்கு பின் தோனி பேட்டி..!

Thala Dhoni
முதல் பந்திலேயே நான் எடுத்த முடிவு தவறானது என்று உணர்ந்து விட்டேன் என தல தோனியை நேற்று தோல்விக்கு பின் பேட்டி அளித்துள்ளார். 
 
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்த முடிவு அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. 
 
இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தின் இரண்டாம் பாகத்தில் பனிப்பொழிவு காரணமாக பந்து திரும்பவில்லை என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்க திணறினர். நேற்று விழுந்த 4 விக்கெட்டுக்களில் 3 விக்கெட் தீபக் சஹார் எடுத்தது என்பதும் ஒரு விக்கெட் ரன் அவுட் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில் தோல்விக்கு பின்னர் பேட்டி அளித்த தல தோனி 180 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என முதல் பந்திலேயே தெரிந்து விட்டது. அப்போதுதான் பேட்டிங் தேர்வு செய்திருக்க கூடாது என்பதை உணர்ந்தேன். போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தோல்விக்கு நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை அனைவரும் முடிந்தவரை வெற்றிக்கு முயற்சி செய்தோம் என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran