செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 6 மார்ச் 2024 (07:58 IST)

ஐபிஎல் தொடருக்கான சென்னைக்கு வந்து சேர்ந்த தோனி!

சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய தோனி இப்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரோடு அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தலைமையில் சி எஸ் கே அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் அதிகமுறை கோப்பையை வென்ற அணிகளில் ஒன்றாக சி எஸ் கே உள்ளது.

இன்னும் 20 நாட்களில் ஐபிஎல் 2024 தொடங்க உள்ள நிலையில் தோனி தன்னுடைய முகநூலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் “புதிய சீசனுக்காக காத்திருக்க முடியவில்லை. புதிய பொறுப்பு. மேலும் அப்டேட்களுக்கு காத்திருங்கள்” எனக் கூறியுள்ளார். இதனால் சி எஸ் கே அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படலாம் என பேச்சுகள் எழுந்துள்ளன. தோனிக்கு அணியில் வேறு ஏதேனும் புதிய பொறுப்புகள் அளிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கருதத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில் சென்னைக்கு வந்து சேர்ந்துள்ளார் தோனி. மற்ற வீரர்களுக்கும் விரைவில் சென்னை வர சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். அணியில் சில வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளதால் மாற்றுத் திட்டத்தை உருவாக்க முன்கூட்டியே தோனி சென்னைக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மார்ச் 22 ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் சி எஸ் கே அணி பெங்களூர் அணியை எதிர்த்து விளையாடுகிறது.