தொடர்புடைய செய்திகள்
- மனிதர் உணர்ந்து கொள்ள.. இது மனிதக் காதல் அல்ல..! – ‘தல’ தோனிக்கு சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!
- கே கே ஆர் அணி நட்சத்திர அந்தஸ்தை இழந்துவிட்டது… கம்பீர் வருத்தம்!
- சி எஸ் கே அணிக்கு பெரும் பின்னடைவு.. காயத்தால் அவதிப்படும் வெளிநாட்டு வீரர்!
- தோனி- ஜுரெல் ஒப்பீடு… விமர்சனங்களை அடுத்து பல்டி அடித்த கவாஸ்கர்!
- 3.6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தோனி ஊரைச் சேர்ந்த வீரர்.. விபத்தில் சிக்கிய சோகம்!
அறுவை சிகிச்சைக்குப் பின் 8 வாரங்கள் ஓய்வு… கான்வேவுக்கு பதில் புதிய வீரரை தேடும் சூழலில் சி எஸ் கே!
இதுவரை ஐபிஎல் தொடரை ஐந்து முறை கைப்பற்றி அதிக கோப்பை வென்ற அணிகளில் ஒன்றாக உள்ளது சிஎஸ்கே. இந்நிலையில் இன்னும் 20 நாட்களில் ஐபிஎல் அடுத்த சீசன் தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே அணி அதற்காக தயாராகி வருகிறது. தோனி ஏற்கனவே பயிற்சியை தொடங்கிவிட்டார்.
தற்போது ருத்துராஜ் உள்ளிட்ட வீரர்கள் சென்னையில் வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டுடன் தோனி ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருக்கு வெற்றிக் கோப்பையை பரிசாக அளிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.
இந்நிலையில் சென்னை அணியின் பேட்டிங் தூண்களில் ஒருவராக கருதப்படும் நியுசிலாந்து அணியின் டெவன் கான்வே காயம் காரணமாக இப்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி அவர் இடதுகை விரலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளாராம். அதனால் அவர் தொடர்ந்து 8 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார். அதனால் அவர் மே மாதம்தான் சி எஸ் கே அணியில் இணைவார் என்று சொல்லப்படுகிறது. இதனால் சி எஸ் கே அணி அவருக்கு பதில் மாற்று வீரரை ஒப்பந்தம் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.