1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2019 (16:21 IST)

பலிகடா ஆன தோனி, கோலி... பலிகொடுக்க தயாரான பிசிசிஐ?

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரின் இந்திய அணி வீரர்களின் பட்டியல் வருகிற 19 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஆம் தேதி துவங்குகிறது. இதனிடையே டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி வருகிற 19 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 
 
உலகக்கோப்பையை இந்தியா 3-வது முறையாக வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது. இந்த தோல்விக்கு இந்திய அனியின் 2 வீரர்கள் பலியாக உள்ளனர். 
அதில் ஒருவர் தோனி இன்னொருவர் கோலி. அதவாது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணியில் தோனி மற்றும் கோலி இடம் பெற வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இவர்களை தொடர்ந்து இந்த லிஸ்டில் ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் பெயரும் உள்ளது என்பது கூடுதல் தகவல்.