பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி போலீஸில் புகார் : பரபரப்பு சம்பவம்
இந்திய அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கின் மனைவி போலீஸரில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக்கிற்கு உலகமெங்கும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.சேவாக்கின் மனைவி ஆர்த்தி. இவர் இவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் கூட்டாளிகள் அவரது கையெழுத்தை முறைகேடாகப் பயன்படுத்தி ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ. 4. 5 கோடி அளவுக்கு கடன் பெற்றதாகத் தெரிகிறது.
அந்தப் பணத்தை அவர்கள், திருப்பிச் செலுத்தவில்லை என்று தெரிகிறது. அதனால் ஆர்த்திக்கு பிரச்சனை எழுந்ததையடுத்து, ஆர்த்தி போலீஸிடம் புகார் அளித்திருக்கிறார்.
அதில், என்கணவர் ஷேவாக்கின் பெயரைப் பயன்படுத்தி, என் கையெழுத்தை முறைகேடாகப் பயன்படுத்தி என்னுடன் வணிகம் செய்துவந்த கூட்டாளிகள் ரு. 4.5 கோடிக் கடன் பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் தன்னை சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, அந்த காசோலையில் முன் தேதியிட்டு வழங்கப்பட்ட காசோலைகளும் பணம் இன்றி திரும்பச் சென்றுள்ளன. இதிகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்திருக்கிறார்.
எனவே என்னைச் சிக்க வைக்க நினைத்து இந்த மோசடி செயலில் ஈடுபட்ட தொழில் கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தற்போது போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.