ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (09:58 IST)

மீண்டும் சிஎஸ்கே கோட்டையில் டெவான் கான்வே.. ஆனால் இந்த வீரர் விலகல்? – ரசிகர்கள் மகிழ்ச்சி!

நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த டெவான் கான்வே காயம் காரணமாக விளையாடாமல் இருந்த நிலையில் மீண்டும் ப்ளேயிங் 11ல் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. ப்ளே ஆப்க்கு தகுதி பெற அடுத்தடுத்து வர கூடிய போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றிபெற வேண்டிய அவசியம் உள்ளது.

இந்நிலையில் கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக அதிரடியாக ஆடிக் கொடுத்த டெவான் கான்வே மீண்டும் அணிக்கு திரும்ப வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெவான் கான்வே அணியில் இருந்தாலும் காயம் காரணமாக போட்டிகளில் இல்லாமல் இருந்து வந்தார். தற்போது அவரது காயங்கள் குணமாகியுள்ள நிலையில் ஐபிஎல்லில் விளையாட உள்ளதாகவும், அடுத்து வரும் உலகக்கோப்பை டி20 போட்டிக்காக பயிற்சி மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.


அதேசமயம் சிஎஸ்கே அணிக்காக தற்போது விளையாடி வரும் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் போட்டிகளிலிருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாகதான் இங்கிலாந்து பவுலர் ரிச்சர்ட் க்ளீசனை உள்ளே கொண்டு வர அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம். சிஎஸ்கே அணியில் நடைபெறும் இந்த மாற்றம் அணியை வெற்றிப்பாதையில் கொண்டு செல்லுமா என காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Edit by Prasanth.K