செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 23 மார்ச் 2024 (17:19 IST)

டெல்லி பேட்ஸ்மேன்களை திணற வைத்த பஞ்சாப் பவுலர்கள்… காப்பாற்றிய டெய்ல் எண்ட் பேட்ஸ்மேன்கள்!

ஐபிஎல் 17 ஆவது சீசன் நேற்று தொடங்கிய நிலையில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. அதையடுத்து இரண்டாம் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஆகிய அணிகள் மோதும் போட்டி நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி பேட்டிங் இறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடியது. அதன் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் அவுட் ஆனதும் ரன்ரேட் குறைய ஆரம்பித்தது.

அதன் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்க முடியாமல் திணறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 18 ரன்களில் அவுட் ஆனார். அந்த அணியின் அபிஷேக் போரல் கடைசி நேரத்தில் அதிரடியில் ஈடுபட்டு பவுண்டரிகளாக விளாசினார். அவர் ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 25 ரன்கள் விளாசினார். இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 174 ரன்கள் சேர்த்துள்ளது.