1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2024 (12:34 IST)

வரட்டா மாமே.. டுர்ர்ர்..! டெல்லி அணிக்கு டாட்டா காட்டிய எங்கிடி, ஹாரி ப்ரூக்! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Delhi Capitals
ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் டெல்லி அணியிலிருந்து இரண்டு முக்கிய வீரர்கள் விலகுவதாக வெளியாகியுள்ள அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஐபிஎல் டி20 போட்டிகள் மார்ச் 22 முதல் தொடங்கும் நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடருக்காக கோலாகலமாக தயாராகி வருகின்றனர். கடந்த சில காலமாகவே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஐபிஎல்லில் கஷ்டக்காலமாகவே இருந்து வந்துள்ளது. சரியான அணி அமைப்பு கிடைக்காத நிலையில் கேப்டனாக பதவி ஏற்ற ரிஷப் பண்ட் அணியை ஒவ்வொரு சீசனிலும் சிறப்பாக நடத்தி சென்றார். அப்போதுதான் அவருக்கு கார் விபத்து ஏற்பட்டு அணியில் விளையாட முடியாத நிலைக்கு சென்றார். அதன்பின்னர் கடந்த சீசனை டேவிட் வார்னர்தான் கேப்டனாக வழிநடத்தினார்.

தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள ரிஷப் பண்ட் இந்த சீசனில் மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளார். ஆனால் கெடுவாய்ப்பாக அணியில் வேறு இரு முக்கிய வீரர்கள் அணியிலிருந்து விலகியுள்ளனர். தென் ஆப்பிரிக்க வீரரும், சிறந்த பந்து வீச்சாளருமான லுங்கி எங்கிடி காயம் காரணமாக டெல்லி அணிக்கு விளையாடவில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அதேபோல டெல்லி அணிக்காக ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கும் சொந்த காரணங்களுக்காக ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ரிஷப் பண்ட் கம்பேக் கொடுத்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்குள் அணியின் முக்கிய வீரர்கள் இருவர் டாட்டா காட்டியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K