1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. CSK officially announced sanju jadeja sam curran trade

வணக்கம் சஞ்சு… டிரேடிங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிஎஸ்கே!

சஞ்சு சாம்சன்
கடந்த சில நாட்களாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக உள்ளது சஞ்சு சாம்சன் – ஜடேஜா டிரேட் பேச்சுவார்த்தை. ஆனால் ஜடேஜாவை சென்னை அணி ட்ரேட் செய்யக் கூடாது என்பது ரசிகர்களின் விருப்பமாகவும், முன்னால் வீரர்களின் விருப்பமாகவும் உள்ளது. ஏனென்றால் ஜடேஜா சென்னை அணிக்காகப் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். 2023 ஆம் ஆண்டு அந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்லக் காரணமாக அமைந்ததே ஜடேஜாதான். அதனால் தோனி அவரை டிரேட் செய்ய அனுமதிக்க மாட்டார் என பலரும் கூறி வருகின்றனர்.

ஆனால் எதார்த்தம் அதற்கு நேரெதிராக உள்ளது. சென்னை மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளுமே இந்த டிரேடில் உறுதியாக இருந்தன. அதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்போது டிரேட் உறுதியாகி இரு அணிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சி எஸ் கே நிர்வாகம். ‘வணக்கம் சஞ்சு’ என சஞ்சு சாம்சனை சிஎஸ்கே குடும்பத்துக்குள் வரவேற்றுள்ள நிர்வாகம், ரவீந்திர ஜடேஜா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்து அவர்களுக்குப் பிரியாவிடைக் கொடுத்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
சஞ்சு வந்தாச்சு… அப்போ அடுத்த சீசன்தான் ‘one last time’-ஆ… ரசிகர்கள் சோகம்!