வியாழன், 27 நவம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 12 நவம்பர் 2025 (13:24 IST)

இந்திய ஏ அணியில் ராகுல் டிராவிட் மகனுக்கு இடம்.. முத்தரப்பு தொடரில் அறிமுகம்..!

இந்திய ஏ அணியில் ராகுல் டிராவிட் மகனுக்கு இடம்.. முத்தரப்பு தொடரில் அறிமுகம்..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் மகனும் விக்கெட் கீப்பர் பேட்டருமான அன்வே டிராவிட், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய பி அணியில் இடம்பெற்றுள்ளார். பெங்களூருவில் நவம்பர் 17 முதல் 30 வரை நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் முத்தரப்பு டி20 தொடரில் அவர் பங்கேற்கிறார்.
 
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் அன்வே, கடந்த மாதம் நடந்த வினோ மன்கட் தொடரில் கர்நாடக அணியின் கேப்டனாக செயல்பட்டார். தந்தையின் செல்வாக்கை தாண்டி, சமீபகாலமாகத் தனது சிறப்பான பேட்டிங் திறமையால் தனித்துவத்தை பெற்றுள்ளார்.
 
ஆயுஷ் மாத்ரே போன்ற சில திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், அன்வே டிராவிட் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 
 
எதிர்வரும் U-19 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் நிரந்தரமாக இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
Edited by Siva