தொடர்புடைய செய்திகள்
- நான் வேணும்னா அத செய்யுங்க…ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நிபந்தனை விதித்த ஜடேஜா!
- ஆஹா எல்லா சிம்டம்ஸும் கரெக்டா இருக்கே… ஜட்டுவுடன் செல்ஃபி எடுத்துப் பகிர்ந்த ஜெய்ஸ்வால்!
- இந்திய ஏ அணியில் ராகுல் டிராவிட் மகனுக்கு இடம்.. முத்தரப்பு தொடரில் அறிமுகம்..!
- சஞ்சு சாம்சன் - ஜடேஜா மாற்றம் நடந்தால், சிஎஸ்கே இந்த வீரரை வாங்க வேண்டும்: அஷ்வின் கொடுத்த ஐடியா..!
- ஜடேஜா- சாம்சன் டிரேட் முடிவதில் தாமதம்… ராஜஸ்தான் அணிக்கு எழுந்த சிக்கல்!
சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!
கடந்த சில நாட்களாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக உள்ளது சஞ்சு சாம்சன் – ஜடேஜா டிரேட் பேச்சுவார்த்தை. ஆனால் ஜடேஜாவை சென்னை அணி ட்ரேட் செய்யக் கூடாது என்பது ரசிகர்களின் விருப்பமாகவும், முன்னால் வீரர்களின் விருப்பமாகவும் உள்ளது. ஏனென்றால் ஜடேஜா சென்னை அணிக்காகப் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். 2023 ஆம் ஆண்டு அந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்லக் காரணமாக அமைந்ததே ஜடேஜாதான். அதனால் தோனி அவரை டிரேட் செய்ய அனுமதிக்க மாட்டார் என பலரும் கூறி வருகின்றனர்.
ஆனால் எதார்த்தம் அதற்கு நேரெதிராக உள்ளது. சென்னை மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளுமே இந்த டிரேடில் உறுதியாக இருந்தன. அதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்போது டிரேட் உறுதியாகி இரு அணிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது சம்மந்தமான ஒப்பந்தம் இன்று வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கும் கேப்டனாக அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.