புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (23:10 IST)

சிஎஸ்கே ஏலம் எடுத்த வீரருக்கு விளையாட தடை

சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்த வீரர் ஒருவர் வயது முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவருக்கு கிரிக்கெட் விளையாட தடைவிதித்துள்ளது பிசிசிஐ.

சமீபத்தில் நடந்த அண்டர்-19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ராஜவர்மன் ஹங்கர்கேதர் என்பவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒன்றரை கோடிக்கு ஏலம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் ராஜவர்தன் வயது முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இது குறித்து மகாராஷ்டிரா விளையாட்டு ஆணையம் பிசிசிஐக்கு ஆதாரத்துடன் கடிதம் எழுதி இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில் வயதைக் குறைத்துக்காட்டி போட்டியில் விளையாடி மோசடி செய்தத ராஜ்வர்தனுக்கு 2 ஆண்டு தடை விதித்து கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.