1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 20 மே 2024 (10:25 IST)

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

Star Sports contoversy
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் செயல்பாடுகளை ரோஹித் சர்மா கண்டித்துள்ள நிலையில், அந்த சேனல் குறித்து கவுதம் கம்பீர் முன்னர் பேசிய வீடியோவையும் ட்ரெண்ட் செய்துள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.



இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பும் உரிமம் பெற்று ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் மும்பை – கொல்கத்தா போட்டி மழையால் நின்றிருந்தபோது கொல்கத்தா அணி ட்ரெஸ்ஸிங் ரூமில் ரோஹித் சர்மா சக வீரர்களுடன் பேசியதை ஆடியோவுடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பியது. இதனால் பெரும் சர்ச்சை உண்டானது. அதை தொடர்ந்து லக்னோ அணி போட்டியின்போது ரோஹித் சர்மா சக வீரர்களுடன் பேசிக் கொண்டிருந்ததை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேமரா மேன் எடுக்க வந்தபோது ரோஹித் சர்மா அவரை கண்டித்து அனுப்பி விட்டார்.

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ரோஹித் சர்மா, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் போட்டியை ஒளிபரப்புவதை விட்டுவிட்டு கிரிக்கெட் ப்ளேயர்களின் அந்தரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டியிருந்தார். அதை தொடர்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு கண்டனங்கள் வலுத்துள்ளது.


ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலை முன்னரே கௌதம் கம்பீர் ஒரு பேட்டியில் விமர்சித்துள்ளார். அதில் அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சில அணிகளுக்கு மக்கள் தொடர்பாளராக செயல்படுவதாகவும், போட்டிகள் நடைபெறும்போது குறிப்பிட்ட 3 ப்ளேயர்களை மட்டுமே காட்டி மற்ற ப்ளேயர்களின் உழைப்பை, திறமையை இருட்டடிப்பு செய்வதாகவும் பேசியுள்ளார். அதுபோல நசீர் ஹுசைன் உள்ளிட்ட பலரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸின் விளையாட்டு ஒளிபரப்பு தாண்டிய நடவடிக்கைகளை விமர்சித்துள்ளனர்.

தற்பொது ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு எதிரான ஹேஷ்டேகுகளை எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் செய்து வரும் நிலையில் இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K