வியாழன், 30 நவம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 22 மே 2023 (14:55 IST)

மீண்டும் கோலி & ஆர்சிபியை கலாய்த்த நவீன் உல் ஹக்!

லக்னோ – ஆர்சிபி போட்டியில் ஏற்பட்ட மோதலில் விராட் கோலியை முறைத்துக் கொண்ட வீரர்களில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த நவீன் உல்ஹக்கும் ஒருவர்.  ஐபிஎல் லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பாக முன்பாக லக்னோ அணிக்கும், ஆர்சிபி அணிக்கும் போட்டி நடந்தது. இந்த போட்டியில் லக்னோவை ஆர்சிபி அணி வென்றது. ஆனால் மைதானத்தில் ஆர்சிபி வீரர் விராட் கோலியின் அக்ரசிவ் செயல்பாடுகளை பொறுக்க முடியாமல் லக்னோ அணியை சேர்ந்த நவீன் உல் ஹக், கோலியுடன் வாக்குவாதத்தில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோலி கை கொடுக்க வந்தபோது லக்னோ அணியில் உள்ள ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக் அவரது கையை தட்டிவிட்டு வம்பு செய்தது கோலி ரசிகர்கள் பலரை கோபத்திற்கு உள்ளாக்கியது. இதனால் நவீன் உல் ஹக்கை தாக்கி சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிட தொடங்கினர்.

இந்நிலையில் நேற்று ஆர்சிபி, குஜராத் அணிக்கெதிரான போட்டியில் தோற்று ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் அந்த அணியை சீண்டும் விதமான வீடியோ மீமை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சீண்டியுள்ளார் நவீன் உல் ஹக். முன்னதாக ஒருமுறை ஆர் சி பி போட்டியில் தோற்றபோது அதை மாம்பழங்களோடு இணைத்து பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.