இவர்தான் கிறிஸ் கெய்லின் ‘குடிகார கூட்டாளி’ - இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவேற்றம்


லெனின் அகத்தியநாடன்| Last Modified திங்கள், 11 ஜூலை 2016 (13:05 IST)
சார்லி என்ற குரங்குடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, இவர்தான் எனது குடிகார கூட்டாளி என்று அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் குறிப்பிட்டுள்ளார்.
 
 
மேற்கிந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், தற்போது கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். மேலும், ஜமைக்கா அணியின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
 
கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற டிரின்பகோ அணிக்கு எதிரான போட்டியில் 54 பந்துகளில் 6 பவுண்டரிகள், 11 சிக்சர்கள் உட்பட 108 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இது இவரது 18வது டி20 சதமாகும். அதே சமயம் கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் 3வது சதமாகும்.
 
இந்நிலையில், கிறிஸ் கெய்ல் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் ’சார்லி’ என்று பெயரிடப்பட்ட குரங்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, "என்னுடைய டிரிங்கிங் பார்ட்னர் சார்லி" [My drinking partner Charlie] என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், சார்லியை பற்றி கிண்டலடித்த சிலரை தான் தனது பக்கத்திலிருந்து நீக்கி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :