திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2020 (09:39 IST)

அடப்பாவி அம்பயர்..! தவறான தீர்ப்பால் பறிபோன வெற்றி! – ரசிகர்கள் அதிர்ச்சி!

நேற்று நடைபெற்ற டெல்லி – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அம்பயரின் தவறான கணிப்பால் பஞ்சாப் வெற்றி பறிபோனது தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்த போது 19வது ஓவரில் ரபோடா வீசிய பந்தை ஜோர்டான் லாங் லாங் ஆன் அடித்துவிட்டு ஓடி ரன் எடுத்தார். அப்போது மட்டையால் ரீச்சை அவர் தொடவில்லை என ஒரு ரன்னை அம்பயர் நிதின் மேனன் குறைத்தார்.

தற்போது அந்த வீடியோவை கவனித்ததில் ஜோர்டான் ரீச்சை தொட்டது தெரிய வந்துள்ளது. அப்போது அந்த ஒரு ரன் அளிக்கப்பட்டிருந்தால் சூப்பர் ஓவர் போகாமலே பஞ்சாப் வெற்றி பெற்றிருக்கும். இதனால் வெற்றி வாய்ப்பு டெல்லிக்கு போனது.

இந்த சம்பவம் பஞ்சாப் அணி வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ள நிலையில், அம்பயர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் ஸ்க்ரீன் ரிவ்யூ பெறலாம் என்றும் ஷேவாக் தெரிவித்துள்ளார்.