செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (13:56 IST)

சென்னை எனது சொந்த ஊர்: சுரேஷ் ரெய்னா பெருமிதம்!

சென்னை எனது சொந்த ஊர்: சுரேஷ் ரெய்னா பெருமிதம்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கையான வீரர்களில் ஒருவர். அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற சுரேஷ் ரெய்னா சென்னை தனது சொந்த ஊரை போன்றது என்றார்.


 
 
இரண்டு ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு பிரீமியர் லீக் என்ற தொடர் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய சுரேஷ் ரெய்னா, தமிழ்நாடு பீரிமியர் லீக் நடத்தப்படுவதம் மூலம் இளம் வீரர்கள் தங்களது திறைமைகளை வெளிப்படுத்த நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்றார்.
 
மேலும், இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான தடை நீங்கிய பின்னர் சென்னை அணியில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும், சென்னை தனது சொந்த ஊரை போன்றது எனவும், ரெய்னா கூறினார்.