ராகுல் காந்தி தகுதிநீக்க விவகாரம்: அமெரிக்காவை அடுத்து ஜெர்மனியும் கருத்து..!
ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கம் குறித்து ஏற்கனவே அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஜெர்மனியும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது. ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து அமெரிக்கா கருத்து தெரிவிக்கையில் ராகுல் காந்தி விவகாரம் குறித்து நீதிமன்ற நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று கூறியிருந்தது.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரத்தில் ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம் என்று ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியபோது இந்தியாவில் எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிக்கு முதல்முறையாக விதிக்கப்பட்ட தீர்ப்பு பற்றிய விவரங்களை நாங்கள் கவனத்தில் கொண்டிருக்கின்றோம். அவரது நாடாளுமன்ற எம்பி பதவி முடக்கம் பற்றியும் கவனம் கொண்டுள்ளோம்
நாங்கள் அறிந்தவரை மேல்முறையீடு செய்யக்கூடிய நிலையில் ராகுல் காந்தி இருக்கிறார் என்றும் இன்று தீர்ப்பு நிலையானது இல்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பதவி முடக்கம் ஏதேனும் ஒரு அடிப்படையில் உள்ளதா என்பதை பற்றி விரைவில் தெளிவாக தெரிய வரும் என்று அவர் தெரிவித்தார்.
Edited by Mahendran