ஜெர்மனி அதிபரை அடுத்து இந்தியா வரும் இத்தாலி பிரதமர்: சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு..!
ஜெர்மனி அதிபரை அடுத்து இந்தியா வரும் இத்தாலி பிரதமர்: சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு..!
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று ஜெர்மனி அதிபர் இந்தியா வருகை தந்த நிலையில் அடுத்ததாக இத்தாலி அதிபர் இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக மார்ச் இரண்டாம் தேதி இந்தியா வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி என்பவர் நாளை மறுநாள் அதாவது மார்ச் இரண்டாம் தேதி இந்தியாவுக்கு வர இருப்பதாகவும் அவர் பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு இத்தாலி பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இதுதான் முதல் முறை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் இரண்டாம் தேதி இந்தியா வரும் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி மற்றும் அந்நாட்டு துணை பிரதமர் மற்றும் உயர்மட்ட குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்தாலி பிரதமரின் இந்திய வருகையின் போது பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் திரௌபதி மருமம் மற்றும் சில முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுவார்
இந்தியா - இத்தாலி இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது
Edited by Mahendran