1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (14:01 IST)

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!
ஐபிஎல் தொடர் மூலமாகக் கவனம் ஈர்த்த யுஷ்வேந்திர சஹால் அதன் பின்னர் இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பாக செயல்பட்டார். ஆனால் சமீபகாலமாகவே இந்திய அணியில் சஹாலுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. 

இது அவருக்கு மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை அவரே டிவிட்டரில் எமோஜிக்கள் மூலமாக தெரிவித்துள்ளார். அதில் விடியலுக்காக காத்திருப்பதாக எல்லாம் தெரிவித்திருந்தார். தற்போது அவர் ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஆர் சி பி அணி தன்னை 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் எடுக்காதது குறித்த அதிருப்தியை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அதில் “நான் அவர்களுக்காக 8 ஆண்டுகளில் சுமார் 140 போட்டிகள் விளையாடினேன். ஆனால் அவர்களிடம் இருந்து நான் எந்தவொரு முறையான தகவல் தொடர்பையும் பெறவில்லை. அவர்கள் என்னை ஏலத்தில் எடுப்பதாக உறுதியளித்தார்கள்.  ஆனால் எடுக்கவில்லை. அதனால் அப்போது அவர்கள் மேல் நான் கோபத்தில் இருந்தேன்” என மனம் திறந்து பேசியுள்ளார்.