1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Reciprocal Tariffs and Their Impact on India: An Overview of US President Trump's New Policy

இந்தியா உள்பட 70 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரி.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,  70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 10% முதல் 41% வரையிலான புதிய வர்த்தக வரிகளை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். இதன்மூலம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும்.
 
எந்தெந்த நாடுகளுக்கு எத்தனை சதவீதம் வரி? 
 
41% வரி: சிரியா
 
40% வரி: லாவோஸ், மியான்மர்
 
39% வரி: சுவிட்சர்லாந்து
 
35% வரி: கனடா, ஈராக், செர்பியா
 
30% வரி: அல்ஜீரியா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, லிபியா, தென்னாப்பிரிக்கா
 
25% வரி: இந்தியா, புருனே, கஜகஸ்தான், மோல்டோவா, துனிசியா
 
20% வரி: பங்களாதேஷ், இலங்கை, தைவான், வியட்நாம்
 
19% வரி: பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து
 
18% வரி: நிகரகுவா
 
15% வரி: இஸ்ரேல், ஜப்பான், துருக்கி, நைஜீரியா, கானா மற்றும் பல நாடுகள்
 
10% வரி: பிரேசில், இங்கிலாந்து, ஃபோக்லாந்து தீவுகள்
 
இந்த வரிகள் இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும். ஆனால்  ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் கப்பலில் ஏற்றப்பட்டு, அக்டோபர் 5-ஆம் தேதிக்குள் அமெரிக்காவை அடையும் பொருட்களுக்கு புதிய வரி விதிக்கப்படாது.
 
இந்த புதிய வரிகள் இந்தியாவை எந்த விதத்தில் பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய வேளாண் துறை அமைச்சர்.. பதவி நீக்கமா?