1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Captain suryakumar yadav dedicated the victory to Pahalgam attack victims

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்… கேப்டன் SKY!

ஆசிய கோப்பை
ஆசியக் கோப்பைத் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி உப்பு சப்பில்லாமல் ஒரு தலைப் பட்சமாக முடிந்து விட்டது.  போட்டியில் டாஸ் வென்று  முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சாளர்களை தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து ஆடிய இந்திய அணி 16 ஆவது ஓவரிலேயே மூன்று விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. அபிஷேக் ஷர்மா 33 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும் சேர்த்தனர். இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும் இவ்வளவு ஒருதலை பட்சமாக முடியும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த போட்டி முடிந்ததும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. பஹல்காம் தாக்குதல் சம்மந்தமாக இரு நாட்டுக்கும் இடையே பகை அதிகரித்துள்ளதால் இரு வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.  அதே போல டாஸ் போட்டபோதும் இரு அணிக் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.

இந்நிலையில் தற்போது இந்திய அணிக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “இந்த வெற்றியை பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நமது ராணுவத்தினருக்கும் சமர்ப்பிக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஏன் பாகிஸ்தான் வீரர்களோடு கைகுலுக்கவில்லை… கேப்டன் சூர்யகுமார் யாதவ்வின் பதில்!