வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2024 (18:43 IST)

தொடர் வெற்றியை தக்க வைக்குமா KKR? குறுக்க இந்த DC வந்தா..? – KKR vs DC இன்று மோதல்!

KKR DC
இன்று ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன.



இந்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. பெரிய டீம்களை விட சிறிய அணிகளின் வீச்சு இந்த சீசனில் சிறப்பாக உள்ளது. அந்த வகையில் இன்று நடைபெறும் KKR vs DC போட்டியும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதற்கு முன்னால் பங்கேற்ற 2 போட்டிகளிலுமே வென்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 போட்டிகளில் முதல் 2 போட்டிகளில் தோற்று இருந்தாலும் 3வது போட்டியில் சிஎஸ்கேவை அடித்து புள்ளிப்பட்டியலில் நுழைந்துள்ளது.

கடந்த ஆட்டத்தில் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். விபத்துக்கு பிறகு களத்தில் இறங்கி பவுண்டரி சிக்ஸர்களை அவர் விளாசுவது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை தருகிறது. புஷ்பான்னா ப்ளவர் இல்ல ஃபயரு என தன் பங்குக்கு வார்னரும் மிரட்டி வருகிறார்.



கொல்கத்தா அணி ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் டிசிப்ளினான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பில் சால்ட் தொடங்கி மிடில் ஆர்டர் ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல் வரை எல்லாம் வலுவான பேட்ஸ்மேன்கள்.

இதுவரை 32 போட்டிகளில் கொல்கத்தா – டெல்லி அணிகள் மோதிக் கொண்டுள்ள நிலையில் 15ல் கொல்கத்தா அணியும், 16 போட்டியில் டெல்லி அணியும் வென்றுள்ளது. 1 போட்டி ட்ரா ஆகியுள்ளது. இரு அணிகளும் சமமான பலத்தில் உள்ளதால் போட்டி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Edit by Prasanth.K