செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 18 டிசம்பர் 2024 (10:09 IST)

கபில்தேவ்வின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை வெகு சிறப்பாக வழிநடத்தி வெற்றியும் பெறவைத்தார்.

இந்நிலையில் தற்போது நடந்து காபா டெஸ்ட்டில் 9 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.  இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை பும்ரா படைபுமாத்துள்ளார்.

பும்ரா 52 விக்கெட்களோடு முதலிடத்தில் உள்ளார். கபில்தேவ் 51 விக்கெட்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்க, கும்ப்ளே மற்றும் அஸ்வின் ஆகியோர் அதற்கடுத்த இடங்களில் உள்ளனர்.