தொடர்புடைய செய்திகள்
- ‘சாமி, உங்களால் இந்தியாவுக்கே பெருமை’… இளையராஜாவுக்கு ரஜினிகாந்தின் வாழ்த்து!
- அந்த வீரர்தான் எங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போகிறார்… நியுசிலாந்து பயிற்சியாளர் ஆருடம்!
- அது என்னுடைய இயல்பான கொண்டாட்ட முறை… மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் -. பாகிஸ்தான் வீரர் அப்ரார்!
- இந்தியாவிலேயே மிகப்பெரிய அம்மன் படமாக இருக்கும்… மூக்குத்தி அம்மன் 2 குறித்து சுந்தர் சி நம்பிக்கை!
- நியுசிலாந்து அணிக்குப் பின்னடைவு… இறுதிப் போட்டியில் முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகம்!
ஐபிஎல் தொடரிலாவது விளையாடுவாரா பும்ரா?... ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை வெகு சிறப்பாக வழிநடத்தி வெற்றியும் பெறவைத்தார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்கு எதிர்கால கேப்டன் தான்தான் என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலராக தொடர் நாயகன் விருதைப் பெற்றார். அந்த தொடரில் மட்டும் அவர் 32 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன் மூலம் தற்காலக் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவராக உருவாகியுள்ளார்.
ஆனால் அந்த தொடரின் இறுதிப் போட்டியில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பாதியிலேயே வெளியேறினார். இந்நிலையில் அவர் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாகக் குணமாகததால், நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் விளையாடவில்லை. இந்நிலையில் இம்மாத இறுதியில் தொடங்கும் ஐபிஎல் தொடர் முதல் இரண்டு வாரங்கள் அவர் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்