தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு
- வெஸ்ட் இண்டீஸ் அணியில் மேலும் ஐந்து பேருக்குக் கொரோனா! அதிர்ச்சி தகவல்!
- பாகிஸ்தான் சென்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு கொரோனா!- போட்டிகள் நடைபெறுமா?
- கடைசி பந்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!
- மைதானத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய பொல்லார்ட்!
ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராகும் பிரையன் லாரா!
அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பயிற்சியாளராக பிரையன் லாரா நியமிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
சன் ரைசர்ஸ் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக மோசமாக விளையாடி வருகிறது. இதனால் அந்த அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் மற்றும் ரஷித் கான் ஆகியோர் கழட்டிவிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் அணிக்கு அடுத்த ஆண்டு முதல் புத்துணர்ச்சி கூட்டும் விதமாக புதிய பயிற்சியாளரை நியமிக்க உள்ளதாக தெரிகிறது.
வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் பிரையன் லாரா அந்த அணியின் தலைமை பயிற்சியாளராகவும், அந்த அணிக்காக முன்பே விளையாடியுள்ள டேல் ஸ்டெயின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட உள்ளனராம்.