1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 23 டிசம்பர் 2021 (23:54 IST)

HBD நீரஜ் சோப்ரா...இணையதளத்தில் ஹேஸ்டேக் டிரெண்டிங்

டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஜாவ்லின் த்ரோ விளையாட்டில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தார்.

இதையடுத்து, நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஆகஸ்டு 7ம் தேதியை ”ஈட்டி எறிதல்” நாளாக கொண்டாட இந்திய தடகள சம்மௌனம்முடிவு செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நீரஜ் சோப்ரா உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றதன் மூலம் இந்தியாவில் 120 ஆண்டுகளுக்கு பிறகு இந்தச் சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. இவருக்கு  சாதனையைப் பாராட்டி அவருக்கு மத்திய அரசு கேல் ரத்னா விருது கொடுத்து கவுரவித்தது.

இந்நிலையில்,  நாளை  நீரவ் சோப்ராவின் பிறந்த நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி அவருக்கு ரசிகர்கள் இணையதளத்தில் ஹேஸ்டேக் பதிவிட்டு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.