தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பவுமா நீக்கம்!
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பவுமா நீக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் உள்ள முன்னணி அணிகளில் ஒன்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி.
தற்போது, மேற்கிந்திய தீவுகள் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, 2 டெஸ்ட்,3 ஒருநாள், டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி நடந்து வரும் நிலையில், தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
2 வது டெஸ்ட் போட்டி வரும் 8 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்குப் பின்னர், ஒருநாள் மற்றும் டி-20 தொடர் நடக்கவுள்ளது.
இந்த நிலையில், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன்களை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
அதன்படி, ஒருநாள் தொடருக்கு கேப்டனாக பவுமா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் டி-20 கிரிக்கெட் தொடருக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில், தென்னாப்பிரிக்க லீக் தொடரில், எய்டன் மாக்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதால், இனி அடுத்து வரும் டி-20 போட்டிகளில் மார்க்ரமே நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகிறது.