1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 மார்ச் 2023 (17:33 IST)

224 ரன்கள் என்ற இமாலய இலக்கு கொடுத்த டெல்லி.. பெங்களூரு வெற்றி பெறுமா?

women ipl1
மகளிர் ஐபிஎல் போட்டியில் இன்று டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே விறுவிறுப்பான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்கள் எடுத்துள்ளது. 
 
தொடக்க ஆட்ட வீராங்கனைகளான லானிங் 72 ரன்களும் வர்மா 84 ரன்களும் எடுத்துள்ளனர். மேலும் மரிஜானா காப் 17 பந்துகளில் 39 ரன்களும் ஜமிமா 15 பந்துகளில் 22 ரன்கள் அடித்துள்ளனர்.  பெங்களூர் அணியை பொருத்தவரை ஹீதர் நைட் என்பவர் மட்டுமே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் 224 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது என்பதும் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் சோபி ஆகிய இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva