திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2023 (07:23 IST)

“பிசிசிஐ சச்சின் மற்றும் தோனியிடம் இந்த வேண்டுகோளை வைக்கவேண்டும்…”- ஆடம் கில்கிறிஸ்ட்!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் சமீபத்தில் உலகக்கோப்பைகான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பையை முடித்துள்ள இந்திய அணி உலகக் கோப்பைக்கு முன்பாக அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கு தயாராகி வருகிறது.

இந்த முறை உலகக் கோப்பை தொடர் முழுவதும் இந்தியாவில் நடக்க உள்ளது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இந்நிலையில் “இந்திய அணியுடன் முன்னாள் வீரரகளான சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம் எஸ் தோனி ஆகிய இருவரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு இந்திய அணியை உற்சாகப்படுத்த வேண்டும். அது சம்மந்தமாக அவர்கள் இருவரிடமும் பிசிசிஐ பேச வேண்டும்” எனக் கூறியுள்ளார்.