திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 அக்டோபர் 2018 (21:14 IST)

பாஜக வேட்பாளர்களாகும் தோனி, கம்பீர்?

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கிரிக்கெட் வீரர்களான தோனி மற்றும் கம்பீரை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
கம்பீர் 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணிக்காக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இதனால், 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோனி, கவுதம் கம்பீர் ஆகியோரை வேட்பாளர்களாக களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
 
டெல்லியில் ஒரு தொகுதியில் கம்பீருக்ம், ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து தோனியையும் களமிறக்க பாஜக பேச்சு நடத்தியதாக பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
 
ஒருவேளை டெல்லியில் போட்டியிட கம்பீருக்கு பாஜக வாய்ப்பு கொடுத்தால், அந்த கட்சியின் எம்பி மீனாட்சி லெகியிடம் இருந்து வாய்ப்பு பறிக்கப்படும். 
 
மேலும், தோனியிடமும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சார்பில் பேச்சு நடத்தப்பட்டு வருவதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.