1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (15:03 IST)

இலங்கை தொடரிலும் இந்திய மும்மூர்த்திகளுக்கு ஓய்வு… கேப்டன் யார்?

உலகக் கோப்பை தொடர் முடிந்த நிலையில் தற்போது இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. உள்ளது. இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரரான சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. இந்த தொடர் முடிந்ததும் இந்திய அணி அடுத்து இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் சீனியர் வீரர்களான கோலி, பும்ரா மற்றும் ரோஹித் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதன் பின்னர் இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ள நிலையில் அவர்களுக்கு இன்னும் சில நாட்கள் ஓய்வளிக்கலாம் என பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இலங்கை தொடரில் கேப்டனாக யார் இருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கே எல் ராகுல் அல்லது ஹர்திக் பாண்ட்யா ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.