வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2022 (15:42 IST)

சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் அறிமுகமான நாள் இன்று!

இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான நாள் இன்று.

சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட்டுக்காக தனது 25 ஆண்டு கால வாழ்க்கையில் அர்ப்பனித்தவர். இந்த 25 ஆண்டுகாலத்தில் பல பேட்டிங் சாதனைகளை ஒன்றன் பின் ஒன்றாக குவித்துள்ளார்.அவரின் கிரிக்கெட் காலத்தில் ரசிகர்களுக்கு பல மகிழ்ச்சிகரமான நினைவுகளை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 9 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் அவரைப் பற்றிய நினைவுகளை ரசிகர்கள் மறக்கவில்லை. இந்நிலையில் நவம்பர் 15 ஆம் தேதி 1989 ஆம் ஆண்டுதான் அவர் முதல் முதலாக சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார்.