1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 14 மார்ச் 2018 (15:40 IST)

சூதாட்ட புகார்; சுதாரித்த ஊழல் தடுப்பு பிரிவு: சிக்கலில் ஷமி...

இந்திய கிரிக்கெட் வீரரான முகமது ஷமி மீது அவரது மனைவி வைத்த புகார் காரணமாக அவர் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படவில்லை. அதேபோல், ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதும் கேள்விகுறியாக உள்ளது.  
 
ஷமியின் மனைவி புகார் அடிப்படையில் கொல்கத்தா போலீஸார் ஷமி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. 
 
ஷமியின் மனைவி, தென் ஆப்ரிக்கா போட்டிக்கு பிறகு ஷமி துபாய்க்கு பாகிஸ்தான் பெண் இருவரை சந்திக்க சென்றதாகவும், அதன் பின்னணியில் சூதாட்டம் இருக்க கூடும் என புகார் அளித்திருந்தார். 
 
இது தொடர்பாக கொல்கத்தா போலீஸார் பிசிசிஐயிடம் ஹமியின் பயண விவரங்களை கேட்டுள்ளது. தற்போது இதில் புது சிக்கல் என்னவெனில் பிசிசிஐ சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது மனைவி தெரிவித்துள்ளார். 
 
எனவே, முகமது ‌ஷமியிடம் சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து ஊழல் தடுப்பு குழு விசாரணை நடத்துகிறது. இந்த விசாரணை முடிவில் என்ன தகவல்கள் வெளியாகும் என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.