அனுஷ்கா ஷர்மாவை அலற வைத்த பெங்களூரு அணி ரசிகர்கள்

kholi
Last Updated: சனி, 28 ஏப்ரல் 2018 (14:22 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையேயான ஆட்டத்தை பார்க்க வந்த நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
அனுஷ்கா ஷர்மா கோலி விளையாடும் மேட்சை பார்க்க வந்தாலே அதில், கோலி டீம் தோற்றுவிடும், இதனால் கோலி விளையாடும் எந்த மேட்சையும் பார்க்க  அனுஷ்கா ஷர்மா வரக்கூடாது என ரசிகர்கள் கூறிவந்தனர். 
 
இந்நிலையில் சமீபத்தில் நடந்த சென்னை - பெங்களூரு அணி இடையேயான போட்டியில் பெங்களூரு அணி 205 ரன்கள் குவித்தது. இதனால் போட்டியை பார்க்க வந்த அனுஷ்கா மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அவர் மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அடுத்ததாக களமைறங்கிய தோனி தலைமையிலான சென்னை அணி 207 ரன்கள் அடித்து சூப்பர் வெற்றி பெற்றது. 
thala
இந்நிலையில் பெங்களூர் ரசிகர்கள் அனுஷ்கா சர்மா வந்தாலே இப்படித்தான் ஆகும் என்று கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனால் அனுஷ்கா செய்வதறியாது அங்கிருந்து சென்றார்.


இதில் மேலும் படிக்கவும் :