தோனியை பாராட்டிய பெண் வர்ணனையாளருக்கு குவிந்த கண்டனங்கள்

Last Modified வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (21:38 IST)
பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி சிக்ஸர்களாக அடித்து வானவேடிக்கை காட்டி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இந்த போட்டி முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டபோதிலும் இன்னும் தோனிக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளரும், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் வர்ணனையாளருமான ஜய்னப் அப்பாஸ் என்பவர் தனது டுவிட்டரில் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

உலகின் சிறந்த ஃபினிஷர் என்பதை தோனி நிரூபித்துவிட்டதாகவும், என்ன ஒரு ஷாட் என்றும் புகழ்ந்துள்ளார். தோனியை புகழ்ந்த பெண் பத்திரிகையாளர் ஜய்னப்புக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை சேர்க்காமல் தனிமைப்படுத்தி வரும் நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய தோனிக்கு பாராட்டு தெரிவித்தது தவறு என்றும் பல பாகிஸ்தான் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :